இந்தியாவில் அறிமுகமான ‘சவுண்ட் ஓன் x60’… அறிமுக விலையில் அதிரடி விற்பனை!

ஹாங்காங்கைச் சேர்ந்த ஆடியோ நிறுவனமான சவுண்ட் ஓன், இந்தியாவில் தனது தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. சவுண்ட் ஓன் x60 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நெக்பேண்டு ஸ்டைல் ஹெட்போன்ஸ் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் மைக்ரோபோனுடன் இந்திய மார்கெட்டில் களமிறங்கியுள்ளது. சவுண்ட் ஓன் x60, ரூபாய் 3,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இந்த தயாரிப்பு அறிமுக விலையாக ரூபாய் 1,890 க்கு குறுகிய காலத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வகை ஹெட்போன்களை, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் வாங்கலாம். ஆன்லைனை பொறுத்தவரை ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் விற்பனை செய்யப்படுகின்றன. 4.2 ப்ளூடூத் கனெக்டிவிட்டி இருப்பதால் ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் கேட்கும் கருவிகளுடன் இதைப் பொருத்த முடிகிறது.

8-10 மணிநேரம் வரை பேட்டரி தாக்குபிடிக்கும் என நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகனேட்டிக் கிளாம்பிங் ஸ்டைல் கொண்டு இந்த  சவுண்ட் ஓன் x60 ஹெட்போன்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளதால் காதுகளில் கச்சிதமாக இவை பொருந்துகின்றன.

சவுண்ட் ஓன் நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே ஹெட்போன்கள், கேபிள்கள், பவர் பேங்குகள் மற்றும் ரெகுலேட்டர்ரகள் போன்ற பல விதமான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. முன்னர் தனது வயர்லெஸ் ஹெட்போன்ஸ் ஆன TWS ZR 100 என்னும் தயாரிப்பை ரூபாய் 3,290-க்கு இந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Source

You might also like:

Comment on this post

Loading Facebook Comments ...
Loading Disqus Comments ...

No Trackbacks.